உள்நாடு

பிறப்புச்சான்றிதழில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது

(UTV | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த கருத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச முற்றாக நிராகரித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் ‘இலங்கையர்’ என குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்திருந்த போதிலும், இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

“பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களில் இனம், மதம் உள்ளடக்கப்படுவதில்லை என பதிவாளர் நாயகம் கூறியதை கண்டதும் ஆச்சரியமடைந்தேன்.

அதனை கண்டதும் உடனே பிரதமர் அமைச்சின் செயலாளருக்கு கதைத்து அதனை சரி செய்யுமாறு கூறியிருந்தார்.

இதனை நான் ஜனாதிபதிக்கும் கூறினேன். யாரு என்ன சொன்னாலும் குறித்த பிறப்பு சான்றிதழ் இந்த தலைமையின் கீழ் மாற்றப்படாது..” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள்

இலங்கையின் 9 வது ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு

editor

உலகத் தமிழர் பேரவையினரின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – சம்பந்தன் தெரிவிப்பு