உள்நாடு

மாகாண சுகாதார பணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

(UTV|கொழும்பு)- தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் உள்ளுராட்சி ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தொற்றுநீக்கும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று மின்வெட்டு தொடர்பிலான முழு விபரம்

‘நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்’

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!