உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,752 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் 14 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் எனவும், மேலும் 7 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்றுமொருவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவராவர எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,064 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்