(UTV|கொழும்பு) – மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற மற்றும் சமூக இடைவெளி பின்பற்றத் தவறியமைக்காக 2,521 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முகக்கவசம் அணியாமல் சென்ற 1,406 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,115 போரையும் இவ்வாறு எச்சரித்து விடுவித்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, மேல் மாகாணத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.