உள்நாடு

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக மேலும் இரு தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இதன்போது வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்துக்கான மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர் – பிரதமர் ஹரிணி

editor

ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு