(UTV | கொழும்பு) – முக்கவசங்கள் இன்றி பயணிக்கும் மற்றும் முகக்கவசங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 24 மணி நேர நிறைவில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிக்கொண்டிருந்த 1,522 பேர் பொலிசாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சமூக இடைவெளியை பேணாத 1,340 பேருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.