உள்நாடு

மேல்மாகாணத்தில் 376 பேர் கைது

(UTV|கொழும்பு) – மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(17) காலை 6 மணிமுதல் இன்று(18) காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் 171 பேரும் கஞ்சா வைத்திருந்த 78 பேரும் மற்றும் சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் 127 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 2164 பேருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக இடைவெளிபேணப்படாமை தொடர்பில் 1765 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Related posts

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு

சஜித், அனுரவுக்கு சவால் விடுத்த ஜனாதிபதி ரணில்

editor