வணிகம்

தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் முறையோடு Lanka IOC உடன் கைகோர்க்கும் HNB SOLO

(UTV|கொழும்பு) – டிஜிட்டல் கட்டணம் செலுத்தல் தீர்வுக்காக உடனடியாக அதிகரித்துள்ள கேள்விகளுக்கு எளிமையான விதத்தில் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியான HNB, Lanka IOC PLC உடன் இணைந்து நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் HNB SOLO டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் App ஊடாக தொடுகையற்ற (Contactless) கட்டணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 41 Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆரம்பித்துள்ளதுடன், இதன் 2ஆம் கட்டமாக நாடு முழுவதிலுமுள்ள 167 Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கான மத்திய வங்கியின் (CBSL) Lanka QR ஆணைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள HNB SOLO, சமூக தனிமைப்படுத்தலை பராமரிக்கும் அதேவேளை, Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது பணம் அல்லது கார்ட் பரிமாற்றங்களையும் தவிர்க்கிறது.

கொவிட்-19க்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் சமூக தனிமைப்படுத்தல் குறித்த ஒரு நடவடிக்கையாக உலகில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் இலகுவான கட்டணம் செலுத்தும் தீர்வாக அமையும்.

‘புதிய நிலைமைக்கு முறையான மாற்றத்துடன், உடல் ரீதியில் தனிமைப்படுத்தல் தொடர்பில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள கண்டிப்பான சட்டதிட்டங்களை நெருக்கமாக பின்பற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் உந்துவிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வாழ்க்கை முறை பணம் இல்லாத மற்றும் தொடுகையற்ற (Contactless) கொடுக்கல் வாங்கல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோலவே எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் பாதுகாப்பான கட்டணம் செலுத்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம். இவ்வாறான காலப்பகுதியில், நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் சமூகத்திற்கு சிறந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும். அதனால் நாம் அனைவரும் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்கையில் வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நாம் தொடர்ச்சியாக புதிய தீர்வுகள் குறித்து ஆராய்ந்து பார்க்கின்றோம்.' என HNBஇன் வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

SOLO App உடன் கிடைக்கு விசேட QR குறீட்டை ஸ்கேன் செய்வதனால் வாடிக்கையாளருக்கு அவர்களுக்கு எரிபொருளுக்காக ஏற்படும் பணச் செலவினை செலுத்த முடியும். Lanka IOCஇன் 209+ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டணம் செலுத்துதல் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுவது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் Solo App இருத்தல் மாத்திரமே ஆகும்.

‘தொடுகையற்ற (Contactless) கட்டணம் செலுத்தும் மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு HNB உடன் நாம் இணைந்தது கொவிட்டுக்கு பிந்தைய உண்மை நிலைக்குள் எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முடிந்தளவில் பாதுகாப்புடன் மற்றும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வதற்கு முடிந்தமையானது எமது அர்ப்பணிப்பினால் ஆகும். தொடுகையற்ற (Contactless) முறை ஊடாக கட்டணம் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கான கட்டணம் செலுத்தும் விதத்தை முழுமையாக மாற்ற முடிவதுடன் அதில் முக்கியமான விடயமென்றால், இன்று உலகில் பாரிய தேவையான POS நிலையங்களில் உள்ள நீண்ட கியூ வரியில் நீண்ட நேரம் செலவிடும் காலதாமதம் இதன் மூலம் குறைவடையும்.’ என Lanka IOCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கட்டணம் செலுத்துவது குறித்து பாவனையாளர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையில் HNBஇனால் Solo App நிர்மாணிக்கப்பட்டுள்ளதனால் எந்தவொரு பிரபல்யமான அல்லது சிறிய வர்த்தக நிலையங்களில் அல்லது விலை கொடுத்து வாங்கும் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் இலகுவாக கையாளும் சந்தர்ப்பம் பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றது.

Google Play Store அல்லது Apple App Store ஊடாக இலவசமாக Solo Appஐ பதிவிரக்கம் செய்து பாவனையாளர்களுக்கு அதனுடன் இணைய முடியும். பதிவிரக்கம் செய்த பின்னர், எவ்வித எழுத்து ஆவணங்களும் இன்றி கையடக்க தொலைபேசி இலக்கம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கி பாவனையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன், வாடிக்கையாளர்கள் எந்தவொரு வங்கியிலும் Solo App நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கு அல்லது Visa/Master கடன் அட்டை அல்லது Debit கார்டுடன் தொடர்புபடுத்த முடியும்.

பின்னர், பாவனையாளர்கள் எந்தவொரு Solo வர்த்தகரிடம் Solo QR குறியீட்டை ஸ்கேன் செய்து Visa, Master கார்ட் அல்லது JustPay தளத்தின் ஊடாக தமது எந்தவொரு கொடுக்கல் வாங்களையும் செய்து கொள்ள முடியும். Lanka IOC எனும் நாடு முழுவதிலும் உள்ள 200க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்லும் முன்னணி தரத்திலுள்ள எரிபொருள் நிறுவனமாகும்.

HNB வாடிக்கையாளர் நிலையங்கள் 252ஐ நாடு முழுவதிலும் நடத்திச் செல்வதுடன் மற்றும் இலங்கையில் தொழில்நுட்ப ரீதியில் பாரிய புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியான HNB, பிஸ்னஸ் Top 10 தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ளதுடன் 2019இல் சிறந்த பெருநிறுவன குடிமகன் நிலைத்தன்மை விருதுவழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கி என HNBக்கு Moody’s Investors Serviceஇனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் Fitch ratings மூலம் HNBக்கு தேசிய நீண்டகால வகைப்பாட்டு திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் அங்கு Fitch Ratingsஇன் இரண்டு இடங்களுக்கு மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரத்தையும் தனதாக்கிக் கொள்வதற்கு HNBக்கு முடிந்தது.

படவிளக்கம்:
படம் – 01: (இடமிருந்து) HNBஇன் பிரதி பொது முகாமையாளர்-மொத்த வங்கிக் குழு – தமித் பெலவத்த, HNBஇன் தலைமை தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் அதிகாரி – ரொஹான் புல்ஜென்ட்ஸ், HNB பிரதி பொது முகாமையாளர் – வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜேய் விஜேமான்ன, HNB முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், Lanka IOC முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, Lanka IOCஇன் சிரேஷ்ட பிரதித் தலைவர் – சில்லறை விற்பனை மற்றும் மனித வளம் – கிரிஸ் ரஞ்சன், Lanka IOCஇன் சிரேஷ்ட பிரதித் தலைவர் – நிதி – பிரமோத் ஜெய்ன் மற்றும் HNBஇன் துணை பொது முகாமையாளர் – பெருநிறுவன வங்கித்துறை – மஜெல்லா ரொட்றிகோ ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

படம் – 02: கொழும்பு 7 ஃபிளிக்ஸ் பெரேரா மாவத்தையிலுள்ள Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், SOLO App ஊடாக Lanka IOC முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவுடன் இணைந்து HNB முகாமைத்துவப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் பணம் செலுத்துகையில் Lanka IOCஇன் சிரேஷ்ட பிரதித் தலைவர் – சில்லறை விற்பனை மற்றும் மனித வளம் – கிரிஷ் ரஞ்சனும் உடன் இருப்பதை படத்தில் காணலாம்.

Related posts

வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாத தொலைபேசிகள்

சுற்றுலா அபிவிருத்தி வலயமாக நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்