விளையாட்டு

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

(UTV| கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்(SSC) கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போதே மகேல ஜெயவர்தனவை தலைவராக நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார்.

Related posts

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனா அணி காலிறுதிக்கு தகுதி

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க