உலகம்

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

(UTV| அமெரிக்கா ) – அமெரிக்க பில்லியனர்களான எலான் மஸ்க் (Elon Musk), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முடக்கப்பட்டுள்ள டிவிட்டர் கணக்குகளிலிருந்து ‘பிட்காயின்’ எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் அனுப்புமாறு கோரப்பட்டது.

பில்கேட்ஸின் ட்விட்டர் கணக்கில் “நீங்கள் ஆயிரம் டொலர்களை அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்” என பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு இவ்வாறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கையாக உறுதிசெய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது டிவிட்டர் நிறுவனம்.

கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகளால் தற்போது ட்வீட் செய்யமுடியும் எனவும் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணினியூடான இரகசிய எழுத்துக்கலையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் நிதி கொடுக்கல் வாங்கல் முறைமையே பிட்கொய்ன் எனப்படுகின்றது.

Related posts

இங்கிலாந்தில் முதல்முறையாக கருப்பை மாற்று சத்திரசிகிச்சை

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி