உள்நாடு

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 17 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை தியகஹ, கெகனதுர, வெஹரஹேன, திக்வெல்ல மற்றும் குடாவெல்ல பிரதேசத்தங்களில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

மாத்தறை மாலிம்பட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

தென் கொரிய சபாநாயகர் இலங்கைக்கு வருகை