உள்நாடு

சுகாதார நடைமுறை – பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அனைத்து பேரூந்து நிலையங்களிலும் 24 மணித்தியாலங்களிலும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பேரூந்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடமும் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பேரூந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இனி இந்தியாவிற்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்!

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது