உள்நாடு

ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 285 பேர்

(UTV|கொழும்பு) – ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள் இன்று(14) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-1506 எனும் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்தவர்களே இன்று14) இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு, நாட்டை வந்தடைந்தவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்

விரைவில் எதிர்க்கட்சிகளின் புதிய முன்னணி