உள்நாடு

கந்தக்காடு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் – இராணுவத் தளபதி

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தினை அண்மித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா குழுவுடன் தொடர்புபட்ட அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அவர்கள் அனைவரையும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நோய் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்படுவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

நாட்டினுல் எச்சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளி அடையாளம் காணப்படுமாயின் அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அனுப்ப புலனாய்வுப் பிரிவு 24 மணித்தியால கண்காணிப்பில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில் கந்தக்காடு குழு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் நாட்டினை முடக்கம் செய்ய எவ்வித தேவையும் இல்லை எனவும் இராணுவத் தளபதி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்வரும் நாட்களில் சில பிரதேசங்களில் இருந்து மேலும் நோயாளிகள் சிலர் அடையாளம் காணப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கந்தக்காடு கொரோனா குழுவின் பரவல் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

ஆர்.ரிஷ்மா 

Related posts

14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றா விட்டால் அபாராதம்!

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினம்

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு