உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட 106 தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 106 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அழைத்துவரப்பட்ட ஒருவர், பங்களாதேஷிலிருந்து அழைத்துவரப்பட்ட இருவர், பெலாரஸிலிருந்து அழைத்துவரப்பட்ட ஐவர் மற்றும் ஈரானிலிருந்து வருகை தந்த வர்த்தக கடற்படையினர் இருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கந்தகாடு மத்தியநிலையத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய, ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்துக்கு மாற்றப்பட்ட கைதிகள் 76 பேருக்கும், புனர்வாழ்வு மையத்திற்குள் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதேவேளை, வைத்திய கண்காணிப்பின் கீழ் 625 பேர் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல் [VIDEO]

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!