உள்நாடு

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ’வினால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, நேற்றைய தினம் (10) கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதுடன், அவரை இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

++++++++++++++++++++++++++++++++++  UPDATE 

ஊடகவியலாளரின் கடமைகளுக்கு இடையூறு: விரைவான விசாரணைகளுக்கு கோரிக்கை

(UTV | கொழும்பு) – கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாலக்க களுவெவ, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை கடிதம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

Related posts

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு

83 எம்பிக்களின் பதவிகள் பறிபோகும் நிலை?

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி