உலகம்

மெக்சிகோவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்தது

(UTV|மெக்சிகோ)- உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மெக்சிகோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 282,283 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,390,734 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 557,416 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,221,101பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் மெக்சிகோ தற்போது 9-வது இடத்தில் உள்ளது.

தற்போதுவரை 7,280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 282,283 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 33,526 பேர் உயிரிழந்துள்ளதுடன், 76,527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி!

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை

“சீனா ஆபத்துடன் விளையாட முனைகிறது” – ஜோ பைடன்