கிசு கிசு

ஜமைக்கா ‘மின்னல்’ உலகிற்கு [PHOTOS]

(UTV | ஜமைக்கா) – உலகில் தன்னிகரற்ற தடகள வீரராக மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட்,  தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்.

உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது.

உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார்.

உசைன் போல்ட் – காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் போல்ட் என்று பெயர் சூட்டியுள்ளார் போல்ட்.

குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

Usian Bolt's New Baby Daughter's Name Rules: Meet Olympia ...

இந்த நிலையில் உசைன் போல்ட்டின் ரசிகர்கள், இதுவே இந்த ஆண்டின் மிகச் சிறந்த பெயர் என கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாசுதேவ நாணயக்கார : மற்றுமொரு கொத்தணியாக மாறும் சாத்தியம் [PHOTOS]

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் [VIDEO]

பயணியின் முகத்தை மறைத்த மலைப்பாம்பு