உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

(UTV|கொழும்பு) – உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் அரச சொத்துக்கள் தேவையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தலைவர்கள் தங்களது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் இடம்பெறும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தங்களது உத்தியோபூர்வ வாகனங்களை பயன்படுத்தவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தலைவர் ஒருவர் தமது உத்தியோகபூர்வ வாகனத்தை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்துவது அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யும் செயலாக கருதப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஆலோசனைகள் மீறப்பட்டால் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபை தலைவர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளாலேயே தீர்மானம்

தே.அ.அ விண்ணப்பம் – எதிர்வரும் 31 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்