வணிகம்

HNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது

(UTV|கொழும்பு)- இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தேசிய நீண்டகால Fitch கடன் தரப்படுத்தலில் போது முன்னோக்கிச் சென்று ‘AA-(lka)’ கடன் தரப்படுத்தலை தனதாக்கிக் கொண்டுள்ளது. பொதுவாக இவை சவால்கள் நிறைந்த பின்னணியுடனான காலப்பகுதிக்குள் HNB Finance நிறுவனத்திற்கு ‘AA-(lks)’ கடன் தரப்படுத்தலை பெற்றுக் கொள்வதற்கு முடிந்தமையானது விசேட தருணமாக அமைவதுடன், நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கின்றமை மிக முக்கியமான விடயம் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறமுடியும்.

Fitch இலங்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடன் தரப்படுத்தல் மறுசுழற்சி செயற்பாட்டின் போது இந்த நாட்டின் நிதித் துறையில் மற்றும் இறையாண்மை கடன் தரப்படுத்தலில் பொருந்தக் கூடிய தன்மை குறைத்திருந்தாலும் HNB Financeஇன் நிதி ஸ்திரத்தன்மைப் பொறுத்து கடன் மதிப்பீட்டை மேலே கொண்டு செல்வதற்கு இந்த நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

தேசிய கடன் கடன் தரப்படுத்தலில் முன்னோக்கிச் செல்வதன் மூலம் நிதி சேவைகள் துறையில் கடந்த 19 வருட காலப்பகுதிக்குள் எம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி சேவை சாத்தியக் கூறுகளை வலுவான வகையில் உறுதிப்படுத்துவதுடன் கொவிட் 19 வைரஸ் வேலைத் திட்டங்களுடன் செயலற்றுப் போன இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவருவதற்காக நாட்டின் நான்கு திசையிலும் பரந்திருக்கும் இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நிதி நிறுவனம் என்ற வகையில் பெற்றுக் கொடுக்கக் கூடிய உச்ச அளவு ஒத்துழைப்பை எப்போதும் இல்லாத வகையில் பெற்றுக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம். என HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் தரப்படுத்தலில் முன்னோக்கிச் செல்வதற்காக கொழும்பு பங்குச் சந்தையின் ஊக்குவித்தல் அறிவிப்புப் பலகையில் பட்டியலிடப்பட்டமை மற்றும் அதனூடாக கிடைக்கப்பெற்ற முதலீட்டு நம்பிக்கையும் பிரபல்யமான விடயமாகவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்ற அடிப்படை பங்கு விநியோகம் HNB Financeஇனால் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் போது பெப்ரவரி மாதத்தின் ஆரம்ப திகதியிலேயே இந்த அடிப்படை பங்கு விநியோகம் 32% இனால் பங்களிப்புக்குட்பட்டமை நிறுவனத்தின் பேரில் முதலீட்டாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை பிரதிபலித்துக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாக கவனிக்கப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

HNB Finance தமது வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் முறையாகவும் மற்றும் இலாபகரமான வழியை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டதுடன் இதன்போது சேவை முறைகளில் செயல்திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது புதிய நிதி சேவைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்த HNB Financeஆல் முடிந்துள்ளதுடன் இந்த சேவைகளின் சிறப்புத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை அதிகரிப்பதற்காகவும் தந்திரோபாய முதலீடுகள் மற்றும் மீள்வடிவமைப்பு வேலைத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிதி சேவைகள் துறையில் நம்பிக்கையான மற்றும் கௌரவமான இலச்சினையுடன் குறிப்பிடத்தகக்க சந்தையில் ஒரு பகுதியை தனதாக்கிக் கொள்ள HNB Finance நிறுவனத்தினால் முடிந்துள்ளதுடன் நிதி மற்றும் வர்த்தக ஸ்திரத்தன்மையை நிதி நிறுவனங்களுக்கு இடையில் மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பாரிய ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளது. HNB FINANCE LIMITED நிறுவனம் 2000ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். என்பதுடன் நிதித் துறையில் சர்வதேச விருதினை வென்ற HNB Finance நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. லீசிங், வர்த்தகக் கடன், நுண்நிதிக் கடன், தங்கக் கடன், சிறுவர்களுக்கான நிலையான வைப்பு, வீட்டுக் கடன், மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNB Finance நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

மத்திய வங்கியின் நாணய சபை : புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்