உள்நாடு

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

(UTV|கொழும்பு)- அரச அலுவலகங்கள், நிறுவனங்களில் அல்லது அரசாங்க பாடசாலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக வாக்குகளை சேகரித்தல், துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளித்தல் அல்லது வேறு கருமங்களை மேற்கொள்ளல் அல்லது கூட்டங்களை நடாத்துதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானது என அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காதிருத்தல் குறித்த அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களதும் உப அலுவலகங்களின் தலைவர்களினதும் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்