(UTV|கிளிநொச்சி )- கிளிநொச்சி பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இயக்கச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைவரே உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்தபோது, அது வெடித்தமையினால் காயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.