(UTV | கொழும்பு) – நான் இப்போது உங்களுடன் கதைக்கப் போவது கொரோனா நாட்களில் நாம் தேர்ந்தெடுத்த முகக்கவசம் அதாவது “Mask” பற்றிய கதையல்ல.. கொரோனா மாஸ்க் பற்றி அனைவருக்கும் தெரியும். பொலிசாரின் பிடிகளில் இருந்து தப்பிக்கவும் பொலிசார் இல்லாத சமயம் கழட்டவும் செய்யும் புதுவித மாஸ்க் தான் கொரோனா மாஸ்க்.
மாஸ்க் என்பது இன்று நேற்று வந்ததொன்றல்ல. உலகளாவிய ரீதியில் நாகரீகம் என்ற பெயரில் வந்தது தான் மாஸ்க், அப்படி இல்லையென்றால் முகமூடி உபயோகம் பழக்கத்தில் இருந்து வந்ததொன்றாகும். மாஸ்க் இனது வரலாற்று கதை நம்மில் சிலருக்கே தெரிந்துள்ளது. இனி அதன் கதையினை பார்ப்போம்.
பெரும்பாலும், முகமூடிகள் உபயோகிப்பது சமய வைபவங்கள், மரண கலாச்சார நிகழ்வுகளில், கருவுறுதல் சடங்குகளில் இல்லையென்றால் நோய்கள் குணமடைய மற்றும் நடனங்களில், யுத்த களங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ள என வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது.
ஆனால், நான் இப்போது அந்தக் கதையை அல்ல கூறப்போகிறேன். இந்நாட்களில் திரைப்படங்களில் மற்றும் தொலைக்கட்சிகளில் வலம் வரும் முகமூடிகள் சிலவற்றினை நாம் உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் கதைக்கவுள்ளேன்.
ஸ்பெயின் நாட்டின் தொலைக்காட்சி கதைகளில் பெரும்பாலும் கதைக்கப்படும் கதைகளில் ஒன்றான “La Casa de Papel” (The House of Paper/Money Heist) எனப்படும் கதையில் வரும் செல்வடோர் டாலி இனது முகமூடி உலகளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு பயன்படுத்தப்படும் உலகில் பிரசித்தம் பெற்ற ஒரு முகமூடியாகும்.
இந்தக் கதையில் குறித்த முகமூடியானது எதிர்ப்பு மற்றும் தேசிய கௌரவத்தின் அடையாளமாக இது இனங்காணப்பட்டுள்ளமையாலேயே இது வரலாற்று சான்றாக இன்றும் நிலைத்துள்ளது எனலாம்.
யார் இந்த டாலி? ஏன் இதற்கு வெண்கோ, வார்கோல்வ் இல்லையென்றால் பிகாசோ ஆகியோரை தேர்வு செய்யவில்லை?
இந்த பிரச்சினை திருடர்களிடமும், திருடர்கள் மற்றும் பொலிசார் இடையும் அதிகளவு பேசப்படும் பேசுபொருளாக மாறுகிறது.
டாலி என்பவர் சர்ரியலிஸ்ட் (Surrealist) கலை பாரம்பரியத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார். இந்த பாரம்பரியம் பிரான்சில் முக்கியமானது என்றாலும், டாலி ஒரு ஸ்பானிஷ்.
அமானுஷ்ய கலை பாரம்பரியம், நெறிமுறை கோட்பாடு ஆகியவற்றை அழிக்க சிலர் முயற்சித்தனர். அவ்வாறே டாலியின் கலையும், இயல்பாகவே அவர் கலகக்காரராக இருப்பதுபோல் அவரை அவர் காட்சிப்படுத்திக் கொண்டார்.
இது நவீன முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிரானது. இந்தத் தொடரில் வரும் திருடர்களின் குழுவும் இந்தக் கருத்தையே கொண்டுள்ளது. எனவே, டாலி அவர்களுக்கு ஒரு புரட்சியின் அடையாளமாக கருதப்படுகிறார்.
அதனை தொடர்ந்து உலகளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இந்த முகத்தினை காணக்கூடியதாக இருந்தது.
2019ம் ஆண்டு இத்தாலியின் புவர்டோ ரிக்கோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்
2018ம் ஆண்டில் ரோம் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போதும் இந்த முகத்தினை காணக்கூடியதாக இருந்தது.
கேய் போக்ஸ் மாஸ்க்/Guy Fawkes Mask
இவர் எமக்கு அறிமுகமாவது V for Vendetta (2005) எனும் திரைப்படத்தில் V எனும் அராஜக சரிதையாக அணியும் முகமூடியாகும். இந்த திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட கிராஃபிக் புதுக்கதையில் வரும் கேய் போக்ஸ் எனும் கதாபாத்திரம் ஒரு முன்மாதிரியான சரிதையாகும்.
போக்ஸ் என்பவர் 1605 இல் துப்பாக்கிச் சூட்டு மருந்து சர்ச்சையில் (Gunpowder plot) தொடர்புபட்ட ஆங்கிலேயராவார்.
இந்த கதையினை சுருக்கமாக சொல்வதென்றால், கத்தோலிக்க கிளர்ச்சியாளர்கள் இங்கிலாந்துக்கு எதிராக போராடினார்கள், ஏனெனில் அது ஒரு புராட்டஸ்டன்ட் நாடு.
இவருக்கும் தேவைப்பட்டது முதலில் ஜேம்ஸ் இளவரசர் மற்றும் அவரது அரசினை முடக்கி கத்தோலிக்க மதத்தினை இங்கிலாந்தில் பரப்புவதேயாகும்.
எனினும், பாராளுமன்றில் சாமி மண்டல சாலையினை (House of Lords) வெடிக்கச் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதற்கு நிகரான ஒரு சம்பவம்தான் இந்த திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் V இற்கு முடிந்ததா பாராளுமன்றினை வெடிக்கச் செய்ய?
டாலியின் முகமூடியானது ஒவ்வொரு சர்வாதிகாரத்திற்கு எதிராக மற்றும் பல்வேறு சமூக ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பாளர்களால் இது உபயோகிக்கப்படுகின்றது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் ஒரு போராட்டத்தின் போது உரையாற்றுகையில் இவ்வாறு மாஸ்க் அணிந்திருந்தார். இது பிரபல Anonymous எனும் ஹேக்கர்-ஆர்வலர் குழுவால் (hacker-activist group) பிரபலமாக அறியப்படுகிறது, ஏனெனில் இது அவர்களின் உலகளாவிய எதிர்ப்புகளுக்கு இந்த முகத்தினையே பயன்படுத்தபப்டுகின்றது..
ஜோகர் முகமூடி/Joker Mask
ஜோகர் இனது முகமூடி மற்றுமொரு மாஸ்க் ஆக இப்போது உபயோகிக்கப்படுகின்றது.
Joker (2019) திரைப்படம் ஒளிபரப்பப்பட முன்னரும் ஜோகர் DC comics மூலம் பிரசித்தம் பெற்றதொன்றாகும். எனினும் இந்த திரைப்படத்தில் வரும் கதைவரிசை,ஜோகர் சரிதை ஆகியவற்றை நாம் வேறொரு கோணத்தில் பார்க்க திணிக்கப்பட்டோம்.
கோதம் நகரம் குற்றச்செயல்களால் மற்றும் ஊழல்களால் நிறைந்து வழிம்பியது. சமூக சேவைகள் இல்லாமலே ஒளிந்து விட்டது. ஆனால் உயர் குல மக்களுக்கு இந்த பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல. ஆர்தர் நாளுக்கு னால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கோடுக்கிறார். எனினும் அவற்றுக்கு பதில்கள் இல்லை. எவரும் இவற்றுக்கு செவிசாய்ப்பதும் இல்லை. எனினும் இவை எங்கிருந்தாலும் அனைவராலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள். எப்படியாவது ஆர்தர் இந்த சமூகத்திற்குள் ஜோக்கராக மாறுகிறார். பின்னர், உலகம் முழுவதும், ஜோக்கர் முகமானது வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை வண்ணப்பூச்சு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அடையாளமாக இன்றும் மாறியுள்ளது எனலாம்.
இறுதியாக இப்போது டாலி,போக்ஸ் போன்று ஜோக்கர்கள் வீதிகளில் இறங்கி விட்டனர்.