கிசு கிசு

கொரோனாவிலும் ஆணவம்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்ற இந்நிலையில் மக்கள் தங்களது வசதிக்கு ஏற்ற விலைகளில் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் 49 வயதுடைய சங்கர் குராடே என்பவர் தனது ஆடம்பரத்தை வெளிக்காட்டும் வகையில் தங்கத்தில் மாஸ்க் அணிந்து விளம்பரத்தை தேடிக்கொண்டுள்ளார்.

அந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ .2.89 லட்சம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் கூறுகையில், ”

“…இது சிறிய துகள்களை கொண்ட ஒரு மெல்லிய முகமூடி, அதனால் சுவாசிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் இந்த முகமூடி எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை…”

“சந்தைகளில் தங்க முகமூடியை நான் அணிந்திருப்பதைக் கண்டு அவர்கள் திகைக்கிறார்கள்.” என தெரிவிக்கிறார்.

தங்க நகையின் மீது அதிக நாட்டம் கொண்ட சங்கர் குராடே, இனி நகைகளை அணிந்துகொள்ள இடமே இல்லை என்ற அளவுக்கு உடல் முழுவதும் மோதிரம், செயின், பிரேஸ்லெட் என்று அடுக்கடுக்காக அணிந்து கொண்டு நடமாடும் நகை கடையாக வலம் வருகிறார்.

இந்த அளவுக்கு வசதி படைத்தவர், காட்டன் மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்கு உதவி செய்யலாமே என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன்?

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம்

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?