உள்நாடு

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொழும்பு)- கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படாதவர் என இனங்காணப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த நபர் கொழும்பு ஜிந்துபிட்டி பிரதேசத்தில் அவரின் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது சமூக தொற்று அல்லவென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

editor