உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சேவைத் தேவையின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

காசாவிற்கு உதவிகள் தயார் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதில் சிக்கல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

ஐந்து மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை