(UTV|ரஷ்யா)- ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம், நாட்டு மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளதுள்ளனர் .
வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.