கேளிக்கை

அமீர்கானுக்கு கொரோனா பரிசோதனை

(UTV|கொழும்பு) – ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர் அமீர்கானின் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து அமீர் கான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். மும்பை மாநகராட்சி அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இப்போது எனது தாயாருக்கு பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறேன். அவருக்கும் நெகட்டிவ் முடிவு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Related posts

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா?

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!! திடீர் மரண சம்பவம்.. ; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்…