உலகம்

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

(UTV|இந்தியா) – இந்தியாவில் டிக் டொக், WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பொருளாதார ரீதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண்

மனிதத் தவறு காரணமாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – ஈரான்