விளையாட்டு

கரீபியன் பிரிமீயர் தொடரில் இருந்து கெய்ல் விலகல்

(UTV | மேற்கிந்திய தீவுகள்) – கரீபியன் பிரிமீயர் தொடரில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரிமீயர் தொடரில் ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இரண்டு முறை தல்லாவஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்துள்ளார்.

2020 சீசனில் செயின்ட் லூசியா ஜவுக்ஸ் அணிக்கு மாறினார். ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி இருந்து செப்டம்பர் மாதம் 10ம் திகதி வரை சிபிஎல் நடைபெற இருக்கிறது. ஏப்பர் மாதம் செயின்ட் லூசியா அணி கெய்லை வாங்கியது.

இந்நிலையில் சொந்த காரணமாக இந்த வருட சீசனில் இருந்து கிறிஸ் கெய்ல் விலக முடிவு செய்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் ‘‘லாக்டவுன் காரணமாக குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இளைய மகள் செயின்ட் சிட்ஸில் இருக்கிறார். நான் ஜமைக்காவில் இருக்கிறேன். அதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இடைவெளி தேவை’’ எனத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

மந்தனாவை பார்க்க 1270 கிமீ. தாண்டி வந்த சீன ரசிகர்!

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!