உலகம்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

(UTV| இந்தியா)- இந்தியாவின் பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிகாரில் 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில தினங்களுக்கு வானிலை மோசமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளதாகவும் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பலத்த மழை பொழியலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

உலகின் 8வது அதிசயமாக அறிவிக்கப்பட்ட கோயில்!

75 வதுகுடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி