உள்நாடுசூடான செய்திகள் 1

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரச்சாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொலைபேசி, மின்னஞ்சல், வைபர், வாட்ஸ் அப், தொலைநகல் மற்றும் முகப்புத்தகத்தினூடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 011 2 886 179, 011 2 886 421, 011 2 886 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும், 011 2 886 551, 011 2 886 552 ஆகிய இலக்கங்களுக்கு தொலைநகல் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 071 9 160 000 என்ற இலக்கத்தினூடாக வைபர் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளங்களினூடாகவும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், Election commission of Sri Lanka என்ற முகப்புத்தகத்திலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

பிரதமரின் கடிதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் பதில் கடிதம்

மகளை கோழிக் கூண்டில் அடைத்த தாய்