உள்நாடு

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு

(UTV|கொழும்பு) – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடுமுழுவதுமுள்ள அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது , 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 08 மரணங்கள் பதிவு

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு!