உலகம்

சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

(UTV | சிங்கப்பூர்) – சிங்கப்பூர் பாராளுமன்றத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (23) கலைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல், கொவிட்-19 பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகான தற்போதைய இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என தேர்தல் ஆணைகுழு அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் ஜூன் 30 ஆம் திகதி இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளியல், வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமர் பிரதமர் லீ சியன் லூங், குறிப்பிட்டார்.

Related posts

அமெரிக்காவில் இதுவரையில் 72,271 உயிரிழப்புகள்

சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி