விளையாட்டு

பாகிஸ்தான் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 24 ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த இந்த பரிசோதனையில், ஷதாப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ரவுப் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

உலகக் கிண்ணத் தொடரின் Plate Final ஆரம்பம்

உபாதைக்கு உள்ளான இலங்கை அணி தலைவர்..