(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்றைய தினம் அதிகரித்து பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.
இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது.
மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.