விளையாட்டு

இலங்கை – இந்தியா மீது சர்வதேச ஊடகங்களது அவதானம்

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் கருத்துத் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

விசேடமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் அதிகளவு கேள்விகளையும் எழுப்பி வருகின்றது.

இதனால் இந்தியா கிரிக்கெட் அதிகாரிகளும் அதிகளவிலான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே அண்மையில் தெரிவித்த கருத்தினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அது தொடர்பில் வீரர்கள் எவரது பெயரும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்

ரஷிய உலக கோப்பையில் முதல் சிவப்பு அட்டை