உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – 2020 மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் செப்ரெம்பர் 30 ஆம் திகதிவரை 3 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும் நடவடிக்கைகள் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்து மற்றும் செயல்முறைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு