(UTV | கொழும்பு) – தேர்தல்களை நடத்துவதற்கும் கொவிட்-19 தடுப்பதற்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) நள்ளிரவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். இதுவரை குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமைக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
சுகாதார வழிகாட்டலின் கீழ் பொதுத் தேர்தலை நடாத்துவது மற்றும் சுகாதார நடைமுறைகள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.