உள்நாடு

கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய “பூயிடா” கைது

(UTV | கொழும்பு) – கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய தொன் லகித ரவிஷான் ஜயதிலக என்ற “பூயிடா” என்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஹங்வெல்ல – ரணால பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 5 வாள்கள், கைப்பேசிகள் மற்றும் 5 சிம் அடை்டைகளுடன் டி56 ரக கைத்துப்பாக்கி ஒன்றும் காவல்துறை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இதுனில் குமார என்ற பாதாள உலக குழு நபருடன் இணைந்து இவர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

பசிலின் மல்வானை மாளிகை வழக்கிலிருந்து பசில் விடுதலை

தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்