உள்நாடு

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் மாலி – மஹிந்தானந்தா முறுகல்

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியை இலங்கை அணி சார்ந்த சில தரப்பினர் பணத்திற்கு விற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

குறித்த கருத்தில் உண்மை நிலைப்பாடு உள்ளதாயின் உண்மை எது பொய் எது என பிரித்தறிவது இலகு. இதனை நான் குறித்த உலகக் கிண்ண தொடரில் விளையாடிய வீரர் என்ற ரீதியில் தெரிவிக்கின்றேன்.

மேலும் தெளிவான சாட்சிகள் இருப்பின் குறித்த பெயரினை மக்களுக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் விளையாடும் வீரர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும் கிரிக்கெட் விளையாட்டை வெறுப்புடன் நோக்கும் சூழ்நிலையை இல்லாமலாக்க முன்வர வேண்டும் எனவும் குறித்த கருத்துத் தொடர்பில் லசித் மாலிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தில் அரசாங்கம் [VIDEO]

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

பொதுத் தேர்தல் – நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை