(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அவை யதார்த்தமானது இல்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி சொல்வது சரிதான்; எங்களுக்கு முதலீடுகள் தேவை. ஜனநாயகம், ஒரு சுயாதீன நீதித்துறை மற்றும் ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ‘ஆடுகளம்’ ஆகியவை இன்று முதலீட்டாளர்களுக்கு அல்ல, எதேச்சதிகாரமிக்க, இராணுவமயமாக்கல் மற்றும் நட்பு முதலாளித்துவத்திற்கு..” என தெரிவித்துள்ளார்.
President is right; we need investments. Democracy, an independent judiciary and a rules based level ‘playing field’ are sine qua non for investors today and not autocracy, militarisation and crony capitalism.
— Mangala Samaraweera (@MangalaLK) June 19, 2020