(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன் மீது பிழையான மற்றும் தவறான குற்றச்சாட்டுக்களை பலதரப்பட்ட தரப்பினர் முன்வைத்து வரும் நிலையில் அவரது கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் வாக்குமூலம் பெற அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் பதிவு தெரிவித்துள்ளார்.
Arrived at the Presidential Commission of Inquiry on #EasterSundayAttack where I was called upon my request for Submissions related to widely spread False Allegations!!!#lka #Srilanka #RB4SL pic.twitter.com/BaIVSZiC3t
— Rishad Bathiudeen (@rbathiudeen) June 19, 2020