(UTV |கொழும்பு) – தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தபால் தொழிற்சங்க ஊழியர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.