உள்நாடு

மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும்

(UTV | கொழும்பு) – மின் பாவனையார்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணமே சரியானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

பாவனையாளர்கள் பயன்படுத்திய மின் அலகுகளுக்கு மாத்திரம் மின் கட்டணம் அறவிடப்படுவதாக மின்சார சபை கூறுகின்றது.

எவரேனும் ஒருவருக்கு பெப்ரவரி மாதத்தை விடவும் கூடுதல் பெறுமதியுடன் கட்டணப் பட்டியல் கிடைத்திருந்தால் அதனை பல தவணைகளில் செலுத்த சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்தை மேற்கோள்காட்டி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த நடவடிக்கை எடுத்தாலும் எந்தவொரு வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளக்கம் கோரியுள்ளார்.

இதன்பிற்பாடு, மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித் – அனுர விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி அறிவித்துள்ளது!

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த