விளையாட்டு

சம்பியன்ஸ் கிண்ணம் ; அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்­கி­லாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தென்னாபிரிக்க அணியில் வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்­பெ­ற­வில்லை. அதே போல் காய­ம­டைந்த வெர்னன் பிலாண்­ட­ருக்கும் அணியில் இட­மில்லை.

ஆனால் வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னி மோர்கெல், சுழற்­பந்து வீச்­சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர். ஏ.பி.டிவில்­லியர்ஸ் தலை வராக நீடிக்கிறார்.

சகலதுறை ஆட்டக்காரர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் அண்டைல் பெலுக்­வயோ, பிரி­டோ­ரியஸ் ஆகியோர் அணியில் உள்­ளனர். ரபடாவும் அணியில் இடம்­பெற்­றுள்ளார்.

[accordion][acc title=”தென்னா­பி­ரிக்க அணி”][/acc][/accordion]

ஏ.பி.டிவில்­லியர்ஸ் (தலைவர்), அம்லா, டி கொக், டுபி­ளெசிஸ், டுமினி, மில்லர், பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், அண்டைல் பெலுக்­வயோ, ரபாடா, தாஹிர், பிரி­டோ­ரியஸ், மஹராஜ், மோர்னி மோர் கெல்.

இந்நிலை யில் சம்­பியன்ஸ் கிண்ணத் திற்கான அவுஸ்­தி­ரே­லிய அணியில் முன்­னணி சகலதுறை ஆட் டக் கா ரரான பௌக்­னெ­ருக்கு இடம் கிடைக்­க­வில்லை. ஸ்டார்க், லின் ஆகியோர் இடம்­பி­டித்­துள்­ளனர்.

15 பேர் கொண்ட அவுஸ்­தி­ரே­லிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்­திய டெஸ்ட் தொட­ரின்­போது காயத்தால் வில­கிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து வில­கிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

அதேபோல் ஷோன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸகொம்ப், ஜோர்ஜ் பெய்லி போன்­றோ­ருக்கும் இடம் கிடைக்­க­வில்லை.

[accordion][acc title=”ஆஸி. அணி”][/acc][/accordion]

ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), வோர்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், மேத்யூ வடே, கிறிஸ் லின், ஹென்றிக்ஸ், கம்மின்ஸ், ஹாஸ்டிங்ஸ், ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.

Related posts

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்

ஆசிய கிண்ண போட்டிகள் இரத்து

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவது போட்டி இன்று