(UTV|இங்கிலாந்து )- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பயணித்த கார் மீது பாதுகாப்பு படையினரின் வாகனம் எதிர்பாராத விதமாக வேகமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது இங்கிலாந்து பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் பிரதமரின் காரை வேகமாக சென்று இடைமறித்தால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது பிரதமர் ஜோன்சன் பயணித்த காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பிரதமர் சென்ற காரை இடைமறித்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த போராட்டக்காரரை கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.