உள்நாடு

இணைய குற்றங்கள் தொடர்பில் முறையிட மேலும் இரு கிளைகள்

(UTV | கொழும்பு) – இணைய குற்றங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு மாத்தறை மற்றும் கண்டியில் இரண்டு கிளைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று(16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சைபர் இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்குரிய பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கே இருக்கிறது. அந்த வகையில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் கணினியுடன் தொடர்புடைய குற்றச் செயல்களை ஆராய்வதற்கு தற்போது சகல நவீன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி இவைகுறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நன்கு பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆரம்பத்தில் கொழும்பில் மாத்திரமே சைபர் இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கக்கூடிய வசதி காணப்பட்டது.

தற்போது அதற்கு மேலதிகமாக கண்டி, மாத்தறையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், அங்கும் இதுபற்றிய முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.

இவற்றுக்கு மேலாக கணினியுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் பற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம்.” என்றார்.

Related posts

கைதுக்கு பின், அரசின் பிரேரணையை எதிர்த்து வாக்களித்த அலி சப்ரி ரஹீம்!

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழியப்பட்டது – தயாசிறி