உலகம்

சென்னையில் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|இந்தியா )- இந்தியா – சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை சென்னை, சென்னை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 343,091 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 9,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில் 42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

தடுப்பூசி செலுத்தாவிடின் இராஜினாமா செய்யுங்கள் : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி உறுதி