கேளிக்கை

ஒஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு

(UTV|அமேரிக்கா)- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் திகதி நடைபெறவிருந்த ஒஸ்கர் விழா தற்போது ஏப்ரல் 25-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பிரிட்டிஷ் திரைப்பட விருது விழாவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மூன்று முறை மட்டுமே ஒஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டது. 1938-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் வெள்ளத்தின் போதும், 1968-ல் மாட்டின் லூத்தர் கிங் கொல்லப்பட்டபோதும், 1981-ல் அதிபர் ரொலாண்ட் ரீகனை கொல்ல நடந்த முயற்சியின்போதும் ஒஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘DOCTOR’ ரிலீஸ் திகதி இதுதானாம்

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி

61 நாட்கள் இரவில் படமான கார்த்தியின் கைதி